முகப்பு » சினிமா » செய்திகள் » படமெடுக்காத தயாரிப்பாளர்கள்தான் பிரச்சினை பண்ணுகிறார்கள்! - அமீர்!
17/02/2012
படமெடுக்காத தயாரிப்பாளர்கள்தான் பிரச்சினை பண்ணுகிறார்கள்! - அமீர்!
தயாரிப்பாளர்கள் - பெப்சி தொழிலாளர் இடையே பிரச்சினையைப் பெரிதாக்குபவர்கள், சினிமா தயாரிக்காமல் சும்மா இருக்கும் தயாரிப்பாளர்கள்தான், என்று இயக்குநர் அமீர் கூறினார். சினிமா உலகில் அனைவருக்கும் தெரிந்த, ஆனால் யாரும் வெளியில் பேசத் தயங்கும் இந்த உண்மையை ஒரு விழாவில் பளிச்சென்று போட்டுடைத்துவிட்டார் அமீர்.

புதுமுகங்கள் ஆரி-சுபா ஜோடியாக நடித்து, நாராயண் நாகேந்திரராவ் டைரக்டு செய்துள்ள படம், 'மாலைப்பொழுதின் மயக்கத்திலே.

' இந்த படத்தை ஸ்ரீலட்சுமி நரசிம்மா கிரியேஷன்ஸ் சார்பில் சி.எச்.மயூரி சேகர் தயாரித்து இருக்கிறார். படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது.

இயக்குநர்கள் சேரன், அமீர், மிஷ்கின், பிரபு சாலமன், பிரபாகர், அறிவழகன், தாமிரா, பாலாஜி மோகன் ஆகிய 8 டைரக்டர்கள் சேர்ந்து பாடல்களை வெளியிட, அவர்களிடம் உதவி டைரக்டர்களாக இருந்தவர்கள் பெற்றுக்கொண்டார்கள். விழாவில், அமீர் பேச்சுதான் ஹைலைட். அவர் கூறுகையில், "சிறு பட தயாரிப்பாளர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்பதற்கு உதாரணம், இந்த படத்தின் தயாரிப்பாளர். அவர் பேசும்போது மிகவும் சந்தோஷமாக பேசினார்.

படம் தயாரிப்பவர்களும், வேலை செய்பவர்களும் சந்தோஷமாக இருக்கிறார்கள். படம் தயாரிப்பவர்கள், படம் தயாரிக்க தயாராக இருக்கிறார்கள். தொழிலாளர்கள் வேலை செய்ய தயாராக இருக்கிறார்கள். படமே தயாரிக்காமல் சும்மா இருப்பவர்கள்தான் பிரச்சினை செய்கிறார்கள்.

ஒரு மணி நேரத்தில் பேசி, முடிய வேண்டிய பிரச்சினை. படம் எடுக்காதவர்கள் பிரச்சினையை பெரிதாக்கி, அதை தீர்க்கவிடாமல் நிறுத்தி வைத்து இருக்கிறார்கள்,'' என்றார். இயக்குநர் சேரன் கூறுகையில், "நான் சாமி கும்பிட மாட்டேன். என் முன்னோர்களை மனசுக்குள் நினைத்துக் கொள்வேன்.

அது, எங்க அம்மாச்சியாகக் கூட இருக்கலாம். தயாரிப்பாளர்கள்-தொழிலாளர்களுக்கு இடையேயான பிரச்சினை தீர வேண்டும் என்று மனசுக்குள் பிரார்த்திக்கிறேன். இந்த பிரச்சினையை சீக்கிரம் பேசி முடிக்க வேண்டும். இல்லையென்றால் பொதுமக்களுக்கு நட்சத்திர கிரிக்கெட் மீது மோகம் வந்துவிடும். அமீர்கானும், சல்மான்கானும் கிரிக்கெட் ஆட ஆரம்பித்தால், அதைத்தான் பார்ப்பார்கள்.

அப்படி கிரிக்கெட் மீது மோகம் ஏற்படாமல் இருக்க, பட அதிபர்கள்-பெப்சி பிரச்சினையை உடனே தீர்க்க வேண்டும்,'' என்றார். தயாரிப்பாளர் மயூரி சேகர் வரவேற்றுப் பேசினார். இயக்குநர் நாராயண் நாகேந்திரராவ் நன்றி கூறினார். விழா நிகழ்ச்சிகளை, பிஆர்ஓ நிகில் முருகன் தொகுத்து வழங்கினார்.
Related News
ஐஸ்வர்யா ராய் ரொம்ப குண்டாகிவிட்டார்!
ஈழத் தமிழர் பற்றிய ரங்கராஜன் பேச்சு வடி கட்டிய பொய்! - சீமான்!
கூடு‌தல் கட்டண வசூல்:போலீஸ் எச்சரிக்கை
பெப்சி - தயாரிப்பாளர் பிரச்சினை, நடுநிலை வகிப்போம்! - நடிகர் சங்கம்!
ஒரு டாட்டூ கலைஞரின் ஆசை! - ரஜினிக்கு பச்சை குத்தணும்!
தமிழக அரசு தலையீடு: தயாரிப்பாளர்கள் - பெப்சி உடன்பாடு!
சியாச்சின் எல்லை பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு! - அமெரிக்கா!
போலீஸ் பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடத்திய தயாரிப்பாளர்கள்!
என்னைப் பயமுறுத்தப் பார்க்கிறார் பாரதிராஜா! -அமீர்!
7-ந் தேதி முதல் முழுமையான ஸ்ட்ரைக் - பெப்சி!
More...
Latest tamil news
அம்மா என் விஷயத்தில் தலையிடுது இல்லை! - கார்த்திகா!
ஜெயா டிவியின் "சவால்"! - கோடையை கொண்டாடும்!
இனி ஆணின் துணை அவசியம் என்ற நிலை இல்லை! - நயன்தாரா!
சினேகா- பிரசன்னா தனிக்குடித்தனம்!
இனி மும்பையில்தான் தங்கப் போகிறேன்! - பிரபு தேவா!
ராஜேஷுடன் இணைந்து காமெடியில் கலக்க வரும் விஜய்.?
பாக்ஸ் ஆபீஸைக் கலக்கும் காமெடி படங்கள்!
டாப்ஸிக்கு மூக்கு குத்த ஆசையாம்!
சாயா சிங்கிற்கு மாப்பிள்ளை தேடும் பெற்றோர்1
ஆர்யா- நயன்- டாப்ஸியுடன் இணைகிறார் அஜீத்!
More...