முகப்பு » சினிமா » செய்திகள் » ரேஸ் பட தயாரிப்பாளர் 18 மாதங்கள் என் கால்ஷீட்டை வீணடித்தார்! - தீபிகா!
16/02/2012
ரேஸ் பட தயாரிப்பாளர் 18 மாதங்கள் என் கால்ஷீட்டை வீணடித்தார்! - தீபிகா!
ரஜினியின் கோச்சடையானுக்காக ரேஸ் 2 படத்திலிருந்து நான் விலகியதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை. ரேஸ் 2 படத்துக்கு முன்பே நான் ராணாவுக்கு கால்ஷீட் கொடுத்துவிட்டேன். மேலும் நான் கொடுத்த தேதிகளை வீணடித்துவிட்டார்கள் ரேஸ் படத் தயாரிப்பாளர்கள்.இதற்கு நானா பொறுப்பு என்று கேள்வி எழுப்பியுள்ளார் தீபிகா. பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோனே ரஜினியுடன் 'ராணா' படத்தில் நடிக்க முதலில் ஒப்பந்தமானார். படத் தொடக்க விழாவிலும் பங்கேற்றார்.

ரஜினிக்கு உடல் நலம் குன்றியதால் அந்தப் படம் தள்ளிப்போனது. ரஜினி உடல் நலம் தேறியதும் ராணாவுக்குப்பதில் கோச்சடையான் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார், விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்த நிலையில் தீபிகா படுகோனே புதிய சிக்கலில் சிக்கிக் கொண்டுள்ளார். அவர் ரேஸ்-2 இந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார்.

பிரபல தயாரிப்பாளர் ரமேஷ் தாரணி இந்த படத்தை தயாரிக்கிறார். ஒப்புக் கொண்டபடி எனது படத்தில் நடிக்காமல் வேறு படங்களில் நடிக்கப் போய்விட்டார் தீபிகா என அவர் மும்பை தயாரிப்பாளர் மற்றும் ஆர்டிஸ்ட் சங்கத்தில் புகார் செய்துள்ளார். இந்த புகார் பற்றி தயாரிப்பாளர்கள் சங்கம் தீபிகா படுகோனேக்கு தகவல் தெரிவித்து விளக்கம் அளிக்குமாறு கேட்டது.

ரஜினி படத்தில் நடிப்பதற்காக இந்திப்படத்திலிருந்து தீபிகா படுகோனே விலகி விட்டதாகவும், புகார் எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்து தீபிகா படுகோனே அளித்த பேட்டியில், "ரஜினியின் கோச்சடையான் படத்தில் நடிப்பதற்காக ரேஸ்-2 படத்தில் இருந்து நான் விலகவில்லை. ரஜினியுடன் நடிக்க ரொம்ப நாளைக்கு முன்பே ஒப்பந்தம் போடப்பட்டுவிட்டது.

'ரேஸ்-2' படத்தில் நடிக்க என்னை ஒப்பந்தம் செய்துவிட்டு படப்பிடிப்பு நடத்தாமல் 18 மாதங்கள் தாமதம் செய்தனர். இதனால் என் கால்ஷீட் விரயமானது. இப்போது நான் வேறு படங்களுக்கு ஒப்பந்தமாகி உள்ளதை பிரச்சினையாக்குவது அவர்கள் தவறு. என்னிடம் நடிகர் சங்கம் விளக்கம் கேட்டுள்ளது. நான் விரைவில் பதில் அனுப்புவேன். தவறு என்னுடையதல்ல," என்றார்.
Related News
தீபிகாவுடன் பரத நாட்டியம் ஆடிய ரஜினி! - கோச்சடையான்!
திருவனந்தபுரம் வந்தார் தீபிகா! - கோச்சடையான் படப்பிடிப்பு!
நடிகை தூக்கில் தொங்கியதன் பின்னணி!
த்ரிஷா அழுகைக்கு பின்னால் உள்ள உண்மை.!
ஷங்கர் தன் அடுத்த பட வேலையைத் தொடங்கிவிட்டார், விக்ரம் ஜோடி தீபிகா..?
தேர்தல் தோல்வி எதிரொலி : ஆந்திர அமைச்சர் ராஜினாமா
கிங்பிஷர் இயக்குநர் பதவியிலிருந்து விலகினார் விஜய் அமிர்தராஜ்!
சினிமாவில் எந்தப் பின்னணியும் இல்லாத பெண் நான்! - தீபிகா!
கோச்சடையானுக்காக விட்ட படத்தில் மீண்டும் நடிக்கும் தீபிகா!
ரஜினியுடன் கோச்சடையானில் நடிக்க முடியாதது! - ஏன்? - கத்ரீனா விளக்கம்!
More...
Latest tamil news
அம்மா என் விஷயத்தில் தலையிடுது இல்லை! - கார்த்திகா!
ஜெயா டிவியின் "சவால்"! - கோடையை கொண்டாடும்!
இனி ஆணின் துணை அவசியம் என்ற நிலை இல்லை! - நயன்தாரா!
சினேகா- பிரசன்னா தனிக்குடித்தனம்!
இனி மும்பையில்தான் தங்கப் போகிறேன்! - பிரபு தேவா!
ராஜேஷுடன் இணைந்து காமெடியில் கலக்க வரும் விஜய்.?
பாக்ஸ் ஆபீஸைக் கலக்கும் காமெடி படங்கள்!
டாப்ஸிக்கு மூக்கு குத்த ஆசையாம்!
சாயா சிங்கிற்கு மாப்பிள்ளை தேடும் பெற்றோர்1
ஆர்யா- நயன்- டாப்ஸியுடன் இணைகிறார் அஜீத்!
More...