முகப்பு » சினிமா » செய்திகள் » கவுதம் மேனன் படப்பிடிப்பு ரத்து! - பெப்சி போராட்டம்!
08/02/2012
கவுதம் மேனன் படப்பிடிப்பு ரத்து! - பெப்சி போராட்டம்!
'பெப்சி' போராட்டம் காரணமாக, ஐதராபாத்தில் நடைபெற இருந்த கவுதம் மேனனின் நீதானே என் பொன் வசந்தம் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தை (பெப்சி) சேர்ந்த தொழிலாளர்கள் சம்பள உயர்வு கேட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

தமிழக அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக அவர்கள், சென்னையில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தார்கள். அதைத் தொடர்ந்து `பெப்சி' தொழிலாளர்களுடனும், பட அதிபர்களுடனும் தொழிலாளர் நல ஆணையம் பேச்சுவார்த்தை நடத்தியது. மீண்டும் வருகிற 9-ந் தேதி பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில், கவுதம் மேனன் இயக்க, ஜீவா-சமந்தா நடிக்கும் 'நீதானே என் பொன் வசந்தம்' என்ற படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நேற்று நடைபெறவிருந்தது. 'பெப்சி' போராட்டம் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. "இந்த படம், தமிழ்-தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் தயாரிக்கப்படுகிறது.

ஹைதராபாத்தில் நடைபெற இருப்பது தெலுங்கு படப்பிடிப்பு. எனவே படப்பிடிப்பு நடைபெற ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்'' என்று தெலுங்கு சினிமா தொழிலாளர்களிடம், கவுதம் மேனன் கேட்டுக்கொண்டார்.

ஆனால் அதற்கு அங்குள்ள சினிமா தொழிலாளர்கள் சம்மதிக்கவில்லை. "பெப்சியை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தி வருவதால், இந்த படத்தில் நாங்கள் வேலை செய்ய மாட்டோம்'' என்று அவர்கள் கூறிவிட்டார்கள். அதைத் தொடர்ந்து, `நீதானே என் பொன் வசந்தம்' படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.
Related News
இனி புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன்! - விஜய்!
ஓவியாவுடன் சண்டை.. வெளிநடப்பு செய்தார் தீபா ஷா! - கேரவனுக்குள்!
படப்பிடிப்பில் சமையலில் அசத்தும் சீமான்!
கோவில் வாசலில் ஷகீலாவை வைத்து ஷூட்டிங்! - பக்தர்கள் எரிச்சல்!
இந்திய சினிமா மதிப்பு 2014-ல் 5 பில்லியன் டாலர்களைத் தொடும்! - அமெரிக்க!
59வது தேசிய திரைப்படவிழாவில் விருது பெற்ற சுசீந்திரன், அப்புக்குட்டி!
முதல் படத்திலேயே 3 பொறுப்புகளை ஏற்கும் 'ஜூனியர் கேப்டன்'
நார்வே தமிழ் திரைப்பட விழா விருதுகள் அறிவிப்பு! - சிறந்த நடிகர் விஷால் - சிறந்த நடிகை ரிச்சா!
வாடகைக்கு பங்களா பிடித்து டிஸ்கஷன்! - நிஷா அகர்வால்!
நார்வே திரைப்பட விழா! - நடிகை ரிச்சா, இயக்குநர் சற்குணம் பங்கேற்கின்றனர்!
More...
Latest tamil news
அம்மா என் விஷயத்தில் தலையிடுது இல்லை! - கார்த்திகா!
ஜெயா டிவியின் "சவால்"! - கோடையை கொண்டாடும்!
இனி ஆணின் துணை அவசியம் என்ற நிலை இல்லை! - நயன்தாரா!
சினேகா- பிரசன்னா தனிக்குடித்தனம்!
இனி மும்பையில்தான் தங்கப் போகிறேன்! - பிரபு தேவா!
ராஜேஷுடன் இணைந்து காமெடியில் கலக்க வரும் விஜய்.?
பாக்ஸ் ஆபீஸைக் கலக்கும் காமெடி படங்கள்!
டாப்ஸிக்கு மூக்கு குத்த ஆசையாம்!
சாயா சிங்கிற்கு மாப்பிள்ளை தேடும் பெற்றோர்1
ஆர்யா- நயன்- டாப்ஸியுடன் இணைகிறார் அஜீத்!
More...