முகப்பு » சினிமா » செய்திகள் » இலியானா மீது தயாரிப்பாளர் புகார்!
07/02/2012
இலியானா மீது தயாரிப்பாளர் புகார்!
இலியானா தமிழில் இரண்டு படங்கள் (கேடி, நண்பன்) செய்திருக்கிறார் இதுவரை. ஆனால் அவருக்கோ, அவரை வைத்து படமெடுத்தவர்களுக்கோ, அட குறைந்தபட்சம் ரசிகர்களுக்கோ... அந்தப் படங்கள் நல்ல அனுபவமாக அமையவில்லை!

அதனால்தானோ என்னமோ... அம்மணிக்கு கோலிவுட் என்றால் வேப்பங்காயாக கசக்கிறதாம். தமிழில் மேற்கொண்டு நடிக்கவும் அவர் விரும்பவில்லையாம். தேடி வந்து தேதி கேட்ட இரண்டு முன்னணி தயாரிப்பாளர்களிடம் சாக்குப் போக்கு சொல்லி அனுப்பிவிட்டு, இரண்டு இந்திப் படங்களுக்கு கால்ஷீட் கொடுத்துவிட்டாராம்.

இதற்கிடையே, தமிழ் சினிமா பிடிக்காது... தமிழ் சினிமா தயாரிப்பாளர் கொடுத்த அட்வான்ஸ் மட்டும் பிடிச்சிருக்கோ என கோபக் குரல் கொடுத்துள்ளார் தயாரிப்பாளர் மோகன் நடராஜன். விக்ரமும் இலியானாவும் நடிப்பதாக முன்பு அறிவிக்கப்பட்ட ஒரு படத்துக்காக கொடுக்கப்பட்ட அட்வான்ஸ் இது. அந்தப் படம் ட்ராப் ஆகிவிட்டது.

கொடுத்த அட்வான்ஸ் பணம் ரூ 50 லட்சத்தை அப்படியே மறந்துவிட்டாராம் இலியானா. படத்தில் நடிக்கவில்லை என்றாகிவிட்டது. நான் கொடுத்த அட்வான்ஸ் என்னாச்சு... உடனடியாக எண்ணி வைக்கணும் என்று தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார் மோகன் நடராஜன். படத்தில் நடிக்க கோடம்பாக்கம் வரப் பிடிக்கலன்னாலும், இந்த பஞ்சாயத்துக்கு இலியானா கண்டிப்பா வந்தாகணுமில்ல!
Related News
ராம்கோபால் வர்மா மீது போலீசில் புகார்!
ஜெயேந்திரர் மீது அவதூறு வழக்கு! - ரஞ்சிதா!
நேரடி ஹாலிவுட் படத்தில் கமல்?
மனைவியுடன் சேர்த்து வைக்கக் கோரி நீதிமன்றத்தில் மனு! - கனல் கண்ணன்!
மண்ணெண்ணெய் அளவு: மத்திய அரசு மீது தமிழக அரசு குற்றச்சாட்டு
பெப்சி - தயாரிப்பாளர் பிரச்சினை, நடுநிலை வகிப்போம்! - நடிகர் சங்கம்!
போலீஸ் பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடத்திய தயாரிப்பாளர்கள்!
ஏப் 7ம் தேதி முதல் நாங்கள் வேலை செய்வோம்! - எஸ்ஏ சந்திரசேகரன்!
300 ஆவணங்களைக் கொடுங்க! - சசிகலா கோரிக்கை!
பரஸ்பர விவாகரத்து கோரிநடிகை விந்தியா மனு!
More...
Latest tamil news
அம்மா என் விஷயத்தில் தலையிடுது இல்லை! - கார்த்திகா!
ஜெயா டிவியின் "சவால்"! - கோடையை கொண்டாடும்!
இனி ஆணின் துணை அவசியம் என்ற நிலை இல்லை! - நயன்தாரா!
சினேகா- பிரசன்னா தனிக்குடித்தனம்!
இனி மும்பையில்தான் தங்கப் போகிறேன்! - பிரபு தேவா!
ராஜேஷுடன் இணைந்து காமெடியில் கலக்க வரும் விஜய்.?
பாக்ஸ் ஆபீஸைக் கலக்கும் காமெடி படங்கள்!
டாப்ஸிக்கு மூக்கு குத்த ஆசையாம்!
சாயா சிங்கிற்கு மாப்பிள்ளை தேடும் பெற்றோர்1
ஆர்யா- நயன்- டாப்ஸியுடன் இணைகிறார் அஜீத்!
More...