முகப்பு » சினிமா » செய்திகள் » ஹாலிவுட் நடிகர்களை விட உயர்ந்தவர் ரஜினி! - ஜாக்கி ஷராப்!
16/02/2012
ஹாலிவுட் நடிகர்களை விட உயர்ந்தவர் ரஜினி! - ஜாக்கி ஷராப்!
ரஜினி கேட்டால் நான் மறுக்க மாட்டேன். அவருக்காக எதையும் செய்வேன். அந்த அளவு மரியாதை வைத்திருக்கிறேன் என்று நடிகர் ஜாக்கி ஷராப் கூறினார். ரஜினியுடன் பல ஆண்டுகளுக்கு முன்பு உத்தர் தக்ஷிண் என்ற இந்திப் படத்தில் நடித்தவர் ஜாக்கி ஷெராப். பல வெற்றிப் படங்களின் நாயகன். இப்போதும் பிஸியான நடிகர்.

தமிழில் முதல்முறையாக ஆரண்ய காண்டம் படத்தில் நடித்தார். அடுத்து ரஜினியின் கோச்சடையான் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி, போட்டோ ஷூட்டிலும் கலந்து கொண்டுள்ளார். இந்தப் படத்தில் நடிப்பது குறித்து ஜாக்கி ஷெராப் கூறுகையில், "கோச்சடையானில் நடிக்குமாறு சௌந்தர்யா கேட்டுக் கொண்டார்.

சினிமாவில் ரஜினி ஒரு உன்னதமான அடையாளம். என்னுடைய நெருங்கிய நண்பர். நான் அவருடன் பணியாற்றியுள்ளேன், அவர் மீது மதிப்பு கொண்டுள்ளேன். அவர் கேட்டால் நான் ஒருபோதும் மறுக்க மாட்டேன். ரஜினிக்காக எதையும் செய்வேன். கோச்சடையான் ஸ்கிரிப்ட் மிக அருமையாக இருந்தது.

எனது கேரக்டரும் வலுவானது. எல்லோருமே ஏ கிரேடு தொழில்நுட்பக் கலைஞர்கள். சௌந்தர்யா பார்த்துப் பார்த்து உருவாக்கி வருகிறார். எனக்கு இந்தப் படம் பெருமை சேர்க்கும் விதத்தில் அமையும் என நம்பிக்கை உள்ளது. அவரது எளிமை பிடிக்கும்.

அவரது உச்ச நட்சத்திர அந்தஸ்து ரொம்பப் பிடிக்கும். இந்தியாவின் நட்சத்திரமான அவர், ஹாலிவுட்டின் எந்தப் பெரிய நடிகரையும் விட உயர்வானவர். என்னைத் தவிர, என் மனைவி விரும்பும் ஒரே நடிகர் ரஜினிதான். அவர் மீது அந்த அளவு அன்பு!," என்றார் ஜாக்கி.
Related News
கவுண்டமணியை இமிடேட் பண்ணவில்லை! - சந்தானம்!
சந்தானத்திடம் தாய்க்குலம் கேட்ட சந்தேகம்! - கழுவி கழுவி!
ராஜஸ்தானை ‌துவ‌ம்ச‌ம் செ‌ய்த சேவா‌க்!
3 பட வியாபாரத்துக்கும் எனக்கும் சம்பந்தமில்லை - ரஜினி!
எதையும் நானே பேஸ் பண்ணுவேன்! - தனுஷ்!
எந்த அணியையும் வீழ்த்தும் திறமை ராஜஸ்தான் ராயல்ஸிடம் உள்ளது! - கேப்டன் டிராவிட்!
தனுஷ், ஐஸ்வர்யாவுக்கு கை கொடுக்கும் சூப்பர் ஸ்டார்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!
டீலர்களை வந்தடைந்த மாருதி எர்டிகா: 12ந் தேதி முதல் விற்பனை!
More...
Latest tamil news
அம்மா என் விஷயத்தில் தலையிடுது இல்லை! - கார்த்திகா!
ஜெயா டிவியின் "சவால்"! - கோடையை கொண்டாடும்!
இனி ஆணின் துணை அவசியம் என்ற நிலை இல்லை! - நயன்தாரா!
சினேகா- பிரசன்னா தனிக்குடித்தனம்!
இனி மும்பையில்தான் தங்கப் போகிறேன்! - பிரபு தேவா!
ராஜேஷுடன் இணைந்து காமெடியில் கலக்க வரும் விஜய்.?
பாக்ஸ் ஆபீஸைக் கலக்கும் காமெடி படங்கள்!
டாப்ஸிக்கு மூக்கு குத்த ஆசையாம்!
சாயா சிங்கிற்கு மாப்பிள்ளை தேடும் பெற்றோர்1
ஆர்யா- நயன்- டாப்ஸியுடன் இணைகிறார் அஜீத்!
More...