முகப்பு » சினிமா » செய்திகள் » கரீனா - சயீப் நிச்சயதார்த்தம் பிப்ரவர் 10!
07/02/2012
கரீனா - சயீப் நிச்சயதார்த்தம் பிப்ரவர் 10!
வயதாகும்வரை காதலர்களாகவே இருந்து விடுவார்களோ என்று கமெண்ட் அடிக்கும் அளவுக்கு பாலிவுட்டில் ரொம்ப நாளாகக் காதலித்துக் கொண்டிருக்கிற சபீப் அலிகானும் கரீனா கபூரும் ஒரு வழியாக நிச்சயதார்த்த தேதியை அறிவித்துள்ளனர். சயீப் அலிகானுக்கு 41 வயது. கரீனாவுக்கு 31 வயது. இருவரும் கிட்டத்தட்ட கணவன் மனைவி ரேஞ்சுக்குதான் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதும், பேட்டி கொடுப்பதுமாக இருந்தார்கள். ஆனால் கல்யாணத்தைப் பற்றி எதுவும் பேசுவதில்லை. வெறுத்துப் போன இரு தரப்பு குடும்பத்தினரும், "அட, கல்யாணத்தைப் பண்ணித் தொலைங்கப்பா!" என வற்புறுத்த ஆரம்பித்துவிட்டனர். சயீப் அலிகான் ஏற்கனவே திருமணம் ஆனவர். முதல் மனைவியான நடிகை அமிர்தாசிங்கை 1991-ல் மணந்தார். இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2004-ல் விவாகரத்து செய்து கொண்டனர். இரண்டாவது மனைவியாகத்தான் கரீனா கபூர் போகிறார். கரீனா- சயீப் அலி திருமணம் மார்ச் 23-ந்தேதி நடக்கிறது. திருமண நிச்சயதார்த்தம் வருகிற 10-ந்தேதி நடக்கிறது. கபூர் குடும்ப வாரிசுகளில் ஒருவர் கரீனா கபூர். இவரது தந்தை ரந்தீர் கபூர் பெரிய நடிகர். மறைந்த இயக்குநர் / நடிகர் ராஜ் கபூரின் சகோதரர். கரீனாவின் அக்காதான் நடிகை கரிஷ்மா கபூர். மறைந்த கிரிக்கெட் வீரரும் பட்டோடி சமஸ்தான நவாபுமான மன்சூர் அலிகான் - நடிகை ஷர்மிளா தாகூர் மகன் இந்த சயீப். மன்சூர் அலிகானுக்குப் பிறகு சமஸ்தான வாரிசு சயீப் அலிகான்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
Related News
தினமும் சட்டசபைக்கு வந்தது 81 எம்எல்ஏக்கள் மட்டுமே!
சாயா சிங்கிற்கு மாப்பிள்ளை தேடும் பெற்றோர்1
கரீனாவுக்கு ரூ 2.5 கோடி சம்பளம்! - லிம்கா விளம்பரம்!
சுகாதார தகவல்கள் பெற தொலைபேசி எண்!
மதுர் பண்டார்கர் மீது விசாரணைக்கு தடை! - நடிகையை கற்பழித்த வழக்கு!
கேத்தி பெர்ரிக்கு விவாகரத்து முடிந்துள்ளது! - 6.5 மில்லியன் டாலர் வீடு!
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு! - ஜெ!
குஜராத்திலிருந்து தமிழகத்துக்கு 200 மெகாவாட் மின்சாரம் மட்டுமே கிடைக்கும்!
கோவை வேளாண் பல்கலையில் மெஷினில் துப்பட்டா சிக்கி ஆய்வு மாணவி பலி
138 பேர் ஜாமீனில் விடுதலை! - கூடங்குளம் போராட்டம்!
More...
Latest tamil news
அம்மா என் விஷயத்தில் தலையிடுது இல்லை! - கார்த்திகா!
ஜெயா டிவியின் "சவால்"! - கோடையை கொண்டாடும்!
இனி ஆணின் துணை அவசியம் என்ற நிலை இல்லை! - நயன்தாரா!
சினேகா- பிரசன்னா தனிக்குடித்தனம்!
இனி மும்பையில்தான் தங்கப் போகிறேன்! - பிரபு தேவா!
ராஜேஷுடன் இணைந்து காமெடியில் கலக்க வரும் விஜய்.?
பாக்ஸ் ஆபீஸைக் கலக்கும் காமெடி படங்கள்!
டாப்ஸிக்கு மூக்கு குத்த ஆசையாம்!
சாயா சிங்கிற்கு மாப்பிள்ளை தேடும் பெற்றோர்1
ஆர்யா- நயன்- டாப்ஸியுடன் இணைகிறார் அஜீத்!
More...