முகப்பு » சினிமா » செய்திகள் » ரஜினியுடன் கோச்சடையானில் நடிக்க முடியாதது! - ஏன்? - கத்ரீனா விளக்கம்!
18/02/2012
ரஜினியுடன் கோச்சடையானில் நடிக்க முடியாதது! - ஏன்? - கத்ரீனா விளக்கம்!
ரஜினியுடன் கோச்சடையானில் நடிக்க முடியாதது வருத்தமாகத்தான் உள்ளது. ஆனால் அவரும் நானும் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு வராமலா போய்விடும் என்கிறார் கத்ரீனா கைஃப். கோச்சடையானில் ரஜினியின் ஜோடியாக கத்ரீனா கைஃப்தான் முதலில் அறிவிக்கப்பட்டார். தனது கால்ஷீட்களை அட்ஜஸ்ட் செய்து தருவதாகவும் அவர் கூறியிருந்தார்.

ஆனால் பின்னர் அவருக்குப் பதிலி தீபிகா படுகோன் நடிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டது. கத்ரீனா விலகலுக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் ரஜினியுடன் நடிக்க முடியாமல் போனது குறித்து கத்ரீனா பேட்டியளித்துள்ளார். அவர் கூறுகையில், "கோச்சடையானுக்கு 20 நாட்கள் கால்ஷீட் இருந்தால் போதும் என்றார் சௌந்தர்யா.

அதற்காக எனது மற்ற பட ஷூட்டிங்குகளை எந்த அளவு அட்ஜஸ்ட் செய்ய முடியும் என்று பார்த்தேன். அடுத்து நான் ஷாரூக்கான் படத்தில் நடிக்கிறேன். அந்தப் படம் காரணமாக அடுத்த 10 மாதங்கள் எங்கும் நகர முடியாத நிலை.

உலகின் வேறு வேறு பகுதியில் இந்த இரு படங்களின் படப்பிடிப்பும் நடக்கும் நிலையில், என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. கோச்சடையான் உயர்ந்த தொழில்நுட்பம் நிறைந்த படம் வேறு. எனவேதான் நடிக்க முடியவில்லை. ஆனால் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அடுத்து வரும் படமொன்றில் நான் ரஜினி சாருக்கு ஜோடியாக நடிப்பேன்," என்றார்.
Related News
இனி ஆணின் துணை அவசியம் என்ற நிலை இல்லை! - நயன்தாரா!
இனி புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன்! - விஜய்!
பச்சையை அழிக்க பாங்காக் போகல! - நயன்!
இந்திய சினிமா மதிப்பு 2014-ல் 5 பில்லியன் டாலர்களைத் தொடும்! - அமெரிக்க!
மு.க. ஸ்டாலினை கட்சியின் தலைவராக்க வேண்டும்! - இளைஞரணி கோரிக்கை!
59வது தேசிய திரைப்படவிழாவில் விருது பெற்ற சுசீந்திரன், அப்புக்குட்டி!
மீண்டும் ஜெயம் ரவியுடன் த்ரிஷா! - நயன்தாரா விலகல்!
பா.ஜ., மாநில மாநாட்டு பந்தல் அமைத்த வாலிபர் பலி!
முதல் படத்திலேயே 3 பொறுப்புகளை ஏற்கும் 'ஜூனியர் கேப்டன்'
நார்வே தமிழ் திரைப்பட விழா விருதுகள் அறிவிப்பு! - சிறந்த நடிகர் விஷால் - சிறந்த நடிகை ரிச்சா!
More...
Latest tamil news
அம்மா என் விஷயத்தில் தலையிடுது இல்லை! - கார்த்திகா!
ஜெயா டிவியின் "சவால்"! - கோடையை கொண்டாடும்!
இனி ஆணின் துணை அவசியம் என்ற நிலை இல்லை! - நயன்தாரா!
சினேகா- பிரசன்னா தனிக்குடித்தனம்!
இனி மும்பையில்தான் தங்கப் போகிறேன்! - பிரபு தேவா!
ராஜேஷுடன் இணைந்து காமெடியில் கலக்க வரும் விஜய்.?
பாக்ஸ் ஆபீஸைக் கலக்கும் காமெடி படங்கள்!
டாப்ஸிக்கு மூக்கு குத்த ஆசையாம்!
சாயா சிங்கிற்கு மாப்பிள்ளை தேடும் பெற்றோர்1
ஆர்யா- நயன்- டாப்ஸியுடன் இணைகிறார் அஜீத்!
More...