முகப்பு » சினிமா » செய்திகள் » ரஜினியின் கோச்சடையான்! - அதிர வைக்கும் 8 பேக்ஸ் ரஜினி!
06/02/2012
ரஜினியின் கோச்சடையான்! - அதிர வைக்கும் 8 பேக்ஸ் ரஜினி!
ஓங்கி உயர்ந்த மலையுச்சி... அதில் விண்ணுக்குமாக மண்ணுக்குமாக, ஒற்றைக் காலில் ஆக்ரோஷமாக நிற்கும் ரஜினி. ஜடா முடியும் அதில் தங்க நிற சூலமும் நீண்ட தாடியுமாக நிற்கும் ரஜினி, இடையில் நீல நிற பட்டுக் கச்சை அணிந்திருக்கிறார். அந்தக் கச்சையின் இன்னொரு நுனி விண்ணுக்கு நீள்கிறது. கிட்டத்தட்ட சிவபெருமானின் ருத்ரதாண்டவம் மாதிரியான ஒரு தோற்றம் அது. பார்த்த உடன் சிலிர்க்க வைக்கிறது.

இந்த ஸ்டில்லில் ரஜினியின் உடல் 8 பேக்ஸ் கொண்டதாக டிசைன் செய்யப்பட்டுள்ளது. Photorealistic படம் என்பதால் இது சாத்தியம்தான். இந்த ஸ்டில் வெளியானது முதல் மீடியா மற்றும் ரசிகர் மத்தியில் ஒரே பரபரப்பு. எங்கும் ரஜினியின் கோச்சடையான் ஸ்டில்களே. அதற்கேற்ப, ரஜினியும் பாரபட்சமின்றி அத்தனை நாளிதழ்களுக்கும் கோச்சடையான் டிஸைனை விளம்பரமாகக் கொடுத்திருந்தார்.

இந்தியாவின் அத்தனை முன்னணி இணையதளங்களும் 'கோச்சடையான் பர்ஸ்ட் லுக்' என்ற தலைப்பில் தமிழ், ஆங்கில டிஸைன்களை வெளியிட்டிருந்தனர். கோச்சடையான் பட அறிவிப்பு வெளியானபோது, ரஜினி ரசிகர்களுக்கே அதில் பெரிய நம்பிக்கை இருக்கவில்லை. ஆனால் இப்போது முதல் ஸ்டில்லைப் பார்த்ததிலிருந்து அவர்களால் ஆர்வத்தை அடக்க முடியவில்லை. அந்த வகையில் கே எஸ் ரவிக்குமார் - சௌந்தர்யா ரஜினி குழுவுக்கு எடுத்த எடுப்பிலேயே வெற்றிகிடைத்துள்ளது எனலாம்!
Related News
கோச்சடையான் குழுவை அசத்தும் ரஜினி!
ஹாங்காங் பயணமானார் ரஜினி! - கோச்சடையான் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு!
கேரளாவில் 100% கல்வியறிவு இருந்து என்ன புண்ணியம்? - குஷ்பு!
பிரபு மகனுக்காக தன் 'பாலிஸியை' தளர்த்திய சூப்பர் ஸ்டார்!
குழந்தைகள் கண் சிகிச்சைக்கு உதவ தன்னார்வ அமைப்பு - ரஜினி தொடங்கி வைத்தார்!
தீபிகாவுடன் பரத நாட்டியம் ஆடிய ரஜினி! - கோச்சடையான்!
இயக்குநர் கே எஸ் ரவிக்குமாரின் மகள் திருமணம்! - ரஜினி நேரில் வாழ்த்து!
சுருட்டுடன் அசத்தும் துப்பாக்கி விஜய்!
கமலின் விஸ்வரூபம் - முதல் பார்வை!
கோச்சடையானை வேண்டாம் என்று சொன்ன ஏவிஎம்?
More...
Latest tamil news
அம்மா என் விஷயத்தில் தலையிடுது இல்லை! - கார்த்திகா!
ஜெயா டிவியின் "சவால்"! - கோடையை கொண்டாடும்!
இனி ஆணின் துணை அவசியம் என்ற நிலை இல்லை! - நயன்தாரா!
சினேகா- பிரசன்னா தனிக்குடித்தனம்!
இனி மும்பையில்தான் தங்கப் போகிறேன்! - பிரபு தேவா!
ராஜேஷுடன் இணைந்து காமெடியில் கலக்க வரும் விஜய்.?
பாக்ஸ் ஆபீஸைக் கலக்கும் காமெடி படங்கள்!
டாப்ஸிக்கு மூக்கு குத்த ஆசையாம்!
சாயா சிங்கிற்கு மாப்பிள்ளை தேடும் பெற்றோர்1
ஆர்யா- நயன்- டாப்ஸியுடன் இணைகிறார் அஜீத்!
More...