முகப்பு » சினிமா » செய்திகள் » நித்யா மேனன் படங்களுக்கு கேரளத்தில் தடை!
14/02/2012
நித்யா மேனன் படங்களுக்கு கேரளத்தில் தடை!
நடிகை நித்யா மேனன் நடித்த படங்களுக்கு கேரளாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மலையாள விநியோகஸ்தர்கள் சங்கம் இந்தத் தடையை அறிவித்துள்ளது. தத்சமயம் ஒரு பெண்குட்டி என்ற படப்பிடிப்பின் போது, சில தயாரிப்பாளர்கள் நித்யா மேனனை சந்தித்து டிஸ்கஷனுக்கு அழைத்துள்ளனர். அவர்களைச் சந்திக்க மறுத்துவிட்டாராம் நித்யா மேனன்.

இதனால் அவர்கள் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தந்தனர். நித்யா மேனன் படங்களுக்கு ஒத்துழைப்பு கிடையாது என தயாரிப்பாளர் சஙகமும் அறிவித்தது. ஆனாலும் நித்யாவை மலையாள நடிகர்கள் சங்கம் அம்மா ஆதரித்தது. எனவே பேச்சுலர் பார்ட்டி, உஸ்தாத் ஓட்டல் ஆகிய இரு படங்களில் ஒப்பந்தம் செய்தனர். இந்த நிலையில் இப்போது, நித்யா மேனன் படங்களுக்கு கேரள விநியோகஸ்தர்கள் சங்கம் தடை விதித்து அறிவித்துள்ளது.

இதுகுறித்து மலையாள திரையுலகினர் சிலர் கூறுகையில், "இது முழுக்க முழுக்க பப்ளிசிட்டி ஸ்டன்ட்தான். காரணம் அப்படி ஒரு பெரிய பிரச்சினையே அல்ல இது. நித்யா மேனனின் தத்சமயம் ஒரு பெண்குட்டி படத்துக்கு விளம்பரம் தேடவே இந்த வேலை. சீக்கிரமே நித்யா மீதான தடையை தயாரிப்பாளர் - விநியோகஸ்தர் சங்கங்கள் விலக்கிக் கொள்ளும், என்றனர். நித்யா மேனன் தமிழில் '180' என்ற படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related News
இனி புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன்! - விஜய்!
கேரளாவில் சூப்பர் ஸ்டார்! - கோச்சடையான் 2 வது கட்ட படப்பிடிப்பு!
முதல் முறையாக விளம்பரங்களில் நடிக்கும் கமல்!
கேரளா செல்லும கோச்சடையான் குழு!
நதிகள் இணைப்பு திட்டத்தை ஆதரிக்கப் போவதில்லை! - கேரளா!
கேரளா செ‌ல்லு‌ம் த‌மிழக பேரு‌ந்துக‌ள் ‌ர‌த்து!
நித்யா மேனன் படங்களுக்கு கேரளத்தில் தடை!
திருநங்கைக்கு வாய்ப்பு தேடும் அனுஷ்கா!
தமிழக ஆளுநர் உரைக்கு கேரளா எதிர்ப்பு! - முல்லைப் பெரியாறு!
நிபுணர் குழு கூறுவதை ஏற்க மாட்டோம்! - கேரளா!
More...
Latest tamil news
அம்மா என் விஷயத்தில் தலையிடுது இல்லை! - கார்த்திகா!
ஜெயா டிவியின் "சவால்"! - கோடையை கொண்டாடும்!
இனி ஆணின் துணை அவசியம் என்ற நிலை இல்லை! - நயன்தாரா!
சினேகா- பிரசன்னா தனிக்குடித்தனம்!
இனி மும்பையில்தான் தங்கப் போகிறேன்! - பிரபு தேவா!
ராஜேஷுடன் இணைந்து காமெடியில் கலக்க வரும் விஜய்.?
பாக்ஸ் ஆபீஸைக் கலக்கும் காமெடி படங்கள்!
டாப்ஸிக்கு மூக்கு குத்த ஆசையாம்!
சாயா சிங்கிற்கு மாப்பிள்ளை தேடும் பெற்றோர்1
ஆர்யா- நயன்- டாப்ஸியுடன் இணைகிறார் அஜீத்!
More...