முகப்பு » சினிமா » செய்திகள் » பிரபு தேவா எனக்கு அண்ணன் மாதிரி உருகும் ஹன்ஸிகா!
03/02/2012
பிரபு தேவா எனக்கு அண்ணன் மாதிரி உருகும் ஹன்ஸிகா!
ஊரெல்லாம் பிரபு தேவாவும் ஹன்ஸிகாவும் லவ்வுறாங்கோ... அதான் நயன்தாரா கோவிச்சிக்கிட்டு ஒதுங்கிடுச்சி' என்று கூவிக் கொண்டிருக்க, பிரச்சினைக்குரிய ஹன்ஸிகாவோ, பிரபு தேவா எனக்கு அண்ணன் மாதிரி என சென்டிமென்ட்டாக உருகியுள்ளார். பிரபுதேவா இயக்கிய எங்கேயும் காதல் படத்தில் ஹன்சிகா நாயகியாக நடித்தார். இதன் பெரும் பகுதி படப்பிடிப்பு வெளிநாட்டில் நடந்தது. அப்போதுதான் இருவருக்கும் நெருக்கமான நட்பு ஏற்பட்டது.

ஹன்சிகா நடிப்பை பொது நிகழ்ச்சிகளில் பிரபுதேவா வெகுவாக புகழ்ந்தார். அதுபோல் ஹன்சிகாவும் பிரபுதேவா திறமையான இயக்குனர் என பாராட்டினார். படம் முடிந்த பிறகும் அவர்கள் தொடர்பு நீடித்ததாக கூறப்பட்டது. இருவரும் மணிக்கணக்கில் செல்போனில் பேசுவதாகவும் செய்தி பரவியது. ஹைதராபாத் ஓட்டலில் ஹன்ஸிகாவின் பிறந்த நாளை விடிய விடிய பிரபு தேவா கொண்டாடியதாகவும், விஷயம் கேள்விப்பட்டு நேராக ஓட்டலுக்குப் போய் ஹன்ஸிகாவுக்கு நயன் பளார் விட்டதாகவும் கூட செய்திகள் வந்தன.

இந்த நிலையில், நயன்தாரா - பிரபு தேவா பிரிந்ததற்கு தான் காரணமில்லை என்று ஹன்ஸிகா கூறியுள்ளார். அவர் கூறுகையில், "பிரபுதேவாவுடன் என்னை இணைத்து பேசுவது வேதனை அளிக்கிறது. பிரபுதேவா எனக்கு அண்ணன் மாதிரி. அண்ணனையும் சகோதரியையும் இணைத்து பேசுவது தப்பில்லையா... தயவுசெய்து என்னைப் பற்றி இதுபோன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம். என்னைப் பொறுத்தவரை யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் நான் தலையிடமாட்டேன்," என்றார்.
Related News
இனி மும்பையில்தான் தங்கப் போகிறேன்! - பிரபு தேவா!
சாதிவாரி கணக்கெடுப்பு கண்துடைப்பு நாடகம்! - ராமதாஸ்!
அமெரிக்காவில் ஹன்சிகா எடையைக் குறைக்க சிகிச்சை!
அர்ஜூனுக்கு கிரிக்கெட் மீது காதல்! - சச்சின்!
தமன்னாவை வழிகாட்டியாக மானசீகமாக கருதும் மணிஷா!
வாலு படத்தில் சிம்புவுக்கு ஜோடி ஹன்சிக!
பிரபு மகனுக்காக தன் 'பாலிஸியை' தளர்த்திய சூப்பர் ஸ்டார்!
யாருக்கு ஆதரவு என அதிமுக முடிவெடுக்கவில்லை! - ஜெ!
கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் 13 நாட்களுக்குப் பின் விடுதலை!
சச்சினுக்கு எம்.பி. பதவி தேவையில்லை! - அண்ணா!
More...
Latest tamil news
அம்மா என் விஷயத்தில் தலையிடுது இல்லை! - கார்த்திகா!
ஜெயா டிவியின் "சவால்"! - கோடையை கொண்டாடும்!
இனி ஆணின் துணை அவசியம் என்ற நிலை இல்லை! - நயன்தாரா!
சினேகா- பிரசன்னா தனிக்குடித்தனம்!
இனி மும்பையில்தான் தங்கப் போகிறேன்! - பிரபு தேவா!
ராஜேஷுடன் இணைந்து காமெடியில் கலக்க வரும் விஜய்.?
பாக்ஸ் ஆபீஸைக் கலக்கும் காமெடி படங்கள்!
டாப்ஸிக்கு மூக்கு குத்த ஆசையாம்!
சாயா சிங்கிற்கு மாப்பிள்ளை தேடும் பெற்றோர்1
ஆர்யா- நயன்- டாப்ஸியுடன் இணைகிறார் அஜீத்!
More...