முகப்பு » சினிமா » செய்திகள் » சத்தமின்றி நடந்து முடிந்த கோச்சடையான் பூஜை!
30/01/2012
சத்தமின்றி நடந்து முடிந்த கோச்சடையான் பூஜை!
சூப்பர் ஸ்டார் ரஜினியின் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் 'கோச்சடையான்' பூஜை நேற்று முன்தினம் சத்தமின்றி நடந்து முடிந்துவிட்டது. கே எஸ் ரவிக்குமார் இயக்க மேற்பார்வையில், சௌந்தர்யா இயக்கும் இந்த அனிமேஷன் 3 டி படத்தில் ரஜினியுடன் பெரும் நட்சத்திப் பட்டாளமே களமிறங்கியுள்ளது. சரத்குமார், கத்ரீனா, சினேகா, நாசர் என முன்னணிக் கலைஞர்கள் கைகோர்த்துள்ளனர்.

கேஎஸ் ரவிக்குமார் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கத்தை மேற்பார்வை செய்கிறார். Motion Capturing தொழில்நுட்பத்துடன் ஹாலிவுட் படம் 'அவதார்' போல கோச்சடையான் உருவாக்கப்படுகிறது.

இந்தப் படத்தின் ஆயத்த வேலைகளில் கடந்த சில மாதங்களாக தீவிர ஈடுபட்டு வந்தனர் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் மற்றும் சௌந்தர்யா ரஜினி. இந்த நிலையில், கோச்சடையான் படத்தின் பூஜை எந்த ஆடம்பரமும் விளம்பரமும் இல்லாமல் சனிக்கிழமை நடந்தது.

இதுகுறித்து லதா ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள செய்தியில், "இன்று மறக்க முடியாத நாள். மறக்க முடியாத தருணம். பூக்கள், ஆரத்தி, தேங்காய் உடைப்பு என கோச்சடையான் பூஜை. என் கணவர் மீண்டும் மேக்கப் நாற்காலியில்... கோச்சடையானுக்கு வாழ்த்துகள்," என்று குறிப்பிட்டுள்ளார். பூஜை நடந்தது குறித்து சௌந்தர்யாவும் உறுதி செய்தார். அதேநேரம், படப்பிடிப்பு தொடங்கும் நாளில் விசேஷமாக ஒரு பூஜை நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.
Related News
கோச்சடையான் குழுவை அசத்தும் ரஜினி!
ஹாங்காங் பயணமானார் ரஜினி! - கோச்சடையான் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு!
பிரபு மகனுக்காக தன் 'பாலிஸியை' தளர்த்திய சூப்பர் ஸ்டார்!
குழந்தைகள் கண் சிகிச்சைக்கு உதவ தன்னார்வ அமைப்பு - ரஜினி தொடங்கி வைத்தார்!
தீபிகாவுடன் பரத நாட்டியம் ஆடிய ரஜினி! - கோச்சடையான்!
இயக்குநர் கே எஸ் ரவிக்குமாரின் மகள் திருமணம்! - ரஜினி நேரில் வாழ்த்து!
ஆசிட் கலந்த குளத்தை பாதுகாத்த போலீசார் பாதிப்பு
கோச்சடையானை வேண்டாம் என்று சொன்ன ஏவிஎம்?
கேரளவின் சித்ராஞ்சலி ஸ்டுடியோவில் கோச்சடையான்!
திருவனந்தபுரம் வந்தார் தீபிகா! - கோச்சடையான் படப்பிடிப்பு!
More...
Latest tamil news
அம்மா என் விஷயத்தில் தலையிடுது இல்லை! - கார்த்திகா!
ஜெயா டிவியின் "சவால்"! - கோடையை கொண்டாடும்!
இனி ஆணின் துணை அவசியம் என்ற நிலை இல்லை! - நயன்தாரா!
சினேகா- பிரசன்னா தனிக்குடித்தனம்!
இனி மும்பையில்தான் தங்கப் போகிறேன்! - பிரபு தேவா!
ராஜேஷுடன் இணைந்து காமெடியில் கலக்க வரும் விஜய்.?
பாக்ஸ் ஆபீஸைக் கலக்கும் காமெடி படங்கள்!
டாப்ஸிக்கு மூக்கு குத்த ஆசையாம்!
சாயா சிங்கிற்கு மாப்பிள்ளை தேடும் பெற்றோர்1
ஆர்யா- நயன்- டாப்ஸியுடன் இணைகிறார் அஜீத்!
More...