முகப்பு » சினிமா » செய்திகள் » சமந்தாவுக்கு காதல் தொல்லை கொடுக்கும் சந்தானம்!
21/02/2012
சமந்தாவுக்கு காதல் தொல்லை கொடுக்கும் சந்தானம்!
நடிகை சமந்தாவுக்கு, காமெடி நடிகர் சந்தானம் காதல் தொ‌ல்லை கொடுத்து இம்சை பண்ணுகிறாராம். இது நிஜத்தில் அல்ல, சினிமாவில் தான். தெலுங்கில் மஹதீரா எனும் மாபெரும் வெற்றி படத்தை இயக்கிய ராஜ மெளலி, அடுத்து நான் ஈ என்ற படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழியிலும் இயக்கி வருகிறார்.

இதில் தெலுங்கு நடிகர் நானி, சமந்தா, சந்தானம் ஆகியோர் நடித்து வருகின்றனர். படம்குறித்து டைரக்டர் ராஜ மெளலி கூறுகையில், படத்தின் கதைப்படி ஹீரோயின் சமந்தா, ஏழ்மையான ஹீரோ நானியை லவ் பண்ணுகிறார். அதேப்போல் வில்லன் சுதீப்பும் சமந்தாவை லவ் பண்ண, சமந்தா அவரது காதலை ஏற்க மறுக்கிறார்.

இதனால் ஆத்திமுற்ற வில்லன் சுதீப், ஹீரோ நானியை கொன்று விடுகிறார். பின்னர் ஹீரோ நானி மறுபிறவியில் ஈ -ஆக பிறவியெடுத்து எதிரியை எப்படி அழிக்கிறார் என்பதை சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறேன்.

இதில் விஷேசம் என்னவென்றால் தமிழ் சினிமாவில் ஈ-யை வைத்து படம் வருவது இதுதான் முதல்முறை. அதுமட்டுமல்ல இந்தபடத்தில் சந்தானத்தை லவ் பண்ணும் கேரக்டரில் சமந்தா நடிக்கிறார். நானி கொல்லப்பட்டதும், மறுபிறவியில் சந்தானத்தை, ஹீரோ நானியாக நினைத்து லவ் பண்ணுகிறார் சமந்தா.

அதேபோல் சந்தானமும், சமந்தாவை துரத்தி, துரத்தி லவ் பண்ணுகிறார். சந்தானம் இதுவரை நடித்த படங்களிலேயே, இந்தபடத்தில் தான் அவருக்கு டயலாக் ரொம்ப கம்மி, அதேசமயம் அவருடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் விதமாக இப்படம் அமையும் என்றார்.
Related News
டாப்ஸிக்கு மூக்கு குத்த ஆசையாம்!
அர்ஜூனுக்கு கிரிக்கெட் மீது காதல்! - சச்சின்!
கவுண்டமணியை இமிடேட் பண்ணவில்லை! - சந்தானம்!
சந்தானத்திடம் தாய்க்குலம் கேட்ட சந்தேகம்! - கழுவி கழுவி!
காதலுக்கு இடையூறாக வந்த 'சமூகம்'... கடலில் குதித்து சாகப் போன பெண் என்ஜீனியர்!
நயன்தாரா பற்றி பேச விரும்பவில்லை! - பிரபு தேவா!
கோவிலில் காதல் குறித்து கேள்வி எழுப்ப வேண்டாம்! - நயன்தாரா
கோவிலில் காதல் குறித்து கேள்வி எழுப்ப வேண்டாம்! - நயன்தாரா
ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி' காதல் ஜோடிகளுக்காக ஸ்பெஷல் ஷோ!
தையா, தக்கான்னு குதிக்கும் சித்தார்த்!
More...
Latest tamil news
அம்மா என் விஷயத்தில் தலையிடுது இல்லை! - கார்த்திகா!
ஜெயா டிவியின் "சவால்"! - கோடையை கொண்டாடும்!
இனி ஆணின் துணை அவசியம் என்ற நிலை இல்லை! - நயன்தாரா!
சினேகா- பிரசன்னா தனிக்குடித்தனம்!
இனி மும்பையில்தான் தங்கப் போகிறேன்! - பிரபு தேவா!
ராஜேஷுடன் இணைந்து காமெடியில் கலக்க வரும் விஜய்.?
பாக்ஸ் ஆபீஸைக் கலக்கும் காமெடி படங்கள்!
டாப்ஸிக்கு மூக்கு குத்த ஆசையாம்!
சாயா சிங்கிற்கு மாப்பிள்ளை தேடும் பெற்றோர்1
ஆர்யா- நயன்- டாப்ஸியுடன் இணைகிறார் அஜீத்!
More...