முகப்பு » சினிமா » செய்திகள் » திருப்பதியில் தமன்னா வேண்டுதல்! - நிம்மதி வேணும்!
07/02/2012
திருப்பதியில் தமன்னா வேண்டுதல்! - நிம்மதி வேணும்!
திருப்பதி திருமலைக்கு திடீரென போன நடிகை தமன்னா மனமுருக ஏழுமலையானை வேண்டிக் கொண்டார். சமீபத்தில் திருமலைக்கு தமன்னா வருவது இது இரண்டாவது முறையாகும்.

தமிழில் ஓஹோவென்றிருந்த தமன்னா, சிறுத்தை, வேங்கை படங்களுக்குப் பிறகு தமிழில் வாய்ப்பே இல்லாமல், தெலுங்குக்குப் போனார். இரு மாதங்களுக்கு முன்பு, ஒரு தெலுங்குப் பட ஷூட்டிங் இடைவேளையில் திருமலைக்குச் சென்றிருந்தார்.

அப்போது அவர் கவர்ச்சியாக உடையணிந்து வந்து சாமி கும்பிட்டதாகக் கூறி சர்ச்சை கிளம்பியது. பக்தர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், திடீரென நேற்று திருமலைக்குச் சென்று சாமி கும்பிட்டார் தமன்னா. ஹைதராபாதிலிருந்து சென்னைக்கு வந்த அவர், பின்னர் இங்கிருந்து திருமலைக்கு தன் தாயாருடன் காரில் சென்றார்.

அதிகாலை சுப்ரபாதம் தரிசனத்துக்குச் சென்ற அவர் அடக்க ஒடுக்கமாக சுடிதார் அணிந்திருந்தார். தரிசனம் முடிந்த பிறகு அவர் கூறுகையில், "எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் நான் திருமலைக்குச் சென்றுவிடுவேன்.

இந்த முறை மன அமைதியும் நிம்மதியும் தன்னம்பிக்கையும் வேண்டி அங்கே சென்றிருந்தேன்," என்றார். திருமலையில் தரிசனம் முடிந்ததும் மீண்டும் சென்னை திரும்பிய தமன்னா, பின்னர் கொச்சியில் ராம் சரண் தேஜாவுடன் டூயட் பாட கிளம்பிவிட்டார்.
Related News
சிரஞ்சீவி குடும்பத்துடன் ஒட்டி உறவாடும் தமன்னா!
தமன்னாவை வழிகாட்டியாக மானசீகமாக கருதும் மணிஷா!
திரிஷாவுக்காக தமன்னா நீக்கம்!
தமன்னாவை சந்திக்க ஃபேண்டா குடிங்க!
தெலுங்கில் ரொம்ப பிஸி! - தமன்னா!
திருப்பதியில் தமன்னா வேண்டுதல்! - நிம்மதி வேணும்!
தமன்னாவை கடுப்பேற்றிய இயக்குனர்!
பக்திப் பழமாகி விட்ட தமன்னா!
தமன்னா பார்ட்டியில் தனுஷ் அசத்தல்!
ஜீன்ஸ் - டி சர்டில் கவர்ச்சியாக வந்து சாமி கும்பிடுவதா! - தமன்னாவுக்கு கண்டனம்!
More...
Latest tamil news
அம்மா என் விஷயத்தில் தலையிடுது இல்லை! - கார்த்திகா!
ஜெயா டிவியின் "சவால்"! - கோடையை கொண்டாடும்!
இனி ஆணின் துணை அவசியம் என்ற நிலை இல்லை! - நயன்தாரா!
சினேகா- பிரசன்னா தனிக்குடித்தனம்!
இனி மும்பையில்தான் தங்கப் போகிறேன்! - பிரபு தேவா!
ராஜேஷுடன் இணைந்து காமெடியில் கலக்க வரும் விஜய்.?
பாக்ஸ் ஆபீஸைக் கலக்கும் காமெடி படங்கள்!
டாப்ஸிக்கு மூக்கு குத்த ஆசையாம்!
சாயா சிங்கிற்கு மாப்பிள்ளை தேடும் பெற்றோர்1
ஆர்யா- நயன்- டாப்ஸியுடன் இணைகிறார் அஜீத்!
More...